வைரல் சம்பவம்



அமெரிக்காவில் ஹாட் டாக்கே ஒரு அம்மாவையும் மகளையும்  பற்றியது தான். அம்மா - மகள் இருவருமே பைலட்கள்.  டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பைலட் குழுவில் இருவருமே இருப்பதுதான் இதில் ஹைலைட்.
சில நாட்களுக்கு முன்பு ஜான் வாட்ரெட் என்ற மருத்துவர் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்கு விமானத்தில் பயணித்திருக்கிறார். எதேச்சையாக பைலட்களிடம் பேச்சுக் கொடுக்கும் போது பைலட் குழுவில் இருந்த பெண்களில் இருவர் அம்மா- மகள் என்பதை அறிந்து கொண்டார்.

ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப் போன அவர், அந்த பைலட்களை நினைவுக்காக புகைப்படம் எடுத்திருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்தப் புகைப்படத்தை இணையத்தில் தட்டிவிட, சில மணி நேரங்களில் வைரலாகிவிட்டனர் அம்மாவும் மகளும். அம்மா வெண்டி ரெக்ஸன் கேப்டனாகவும் மகள் கெல்லி ரெக்ஸன் ஃபர்ஸ்ட் ஆபீஸராகவும் பணியாற்றி வருகின்றனர்.இருவருக்கும் இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.