காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரம்



நம் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. வருடத்துக்கு சுமார் 50 லட்சம் பேர் காற்று மாசுபாட்டின் காரணமாக உயிரிழக் கின்றனர். இந்நிலையில் மாசுபட்ட காற்றை தூய்மையான காற்றாக மாற்ற ஆரம்பித்துவிட்டது சீனா. இதற்காக ஷியான் நகரில் 100 மீட்டர் உயரம் கொண்ட ஓர் இயந்திரத்தை  நிறுவியுள்ளது.

உலகின் மிகப்பெரிய காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரம் இது. இதனைச் சுற்றி பசுங்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குடில்களில் இருக்கும் தாவரங்கள் வெளியிடும் காற்றை உள்ளிழுத்து அதை தூய்மை செய்கிறது இந்த இயந்திரம். தினமும் 10 மில்லியன் கனமீட்டர் அளவுள்ள புத்துணர்வான காற்றை இந்த இயந்திரம் சுத்திகரிக்கிறது.