வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய பெண்



இன்று தெருவுக்குத் தெரு பள்ளிகள் முளைத்துவிட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை கற்றலுக்கான எந்தச் சூழலும் இல்லாமல் வெறும் கட்டடங்களாக மட்டுமே உயர்ந்து நிற்கின்றன. அதனாலேயே குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைக்கூட வெறுக்கும் நிலை உருவாகிறது. இந்நிலையில்  ஒரு சம்பவம் இந்தியக் கல்வித்துறையையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதைப் பார்ப்போம்.கேரளாவின் அழகைப் பிரதி பலிக்கும் குண்டம்குழி  என்கிற சிறுகிராமம். அங்கே வீற்றிருக்கும் மிசிரியா உம்மாவின் வீடு எப்போதுமே திறந்திருக்கிறது.

யாராவது அந்த வீட்டுக்கு வருவதும் போவதுமாகவே இருக்கின்றனர். குறிப்பாக மாலை நேரமானால் பள்ளி மாணவிகள்  அந்த வீட்டை நோக்கி  படையெடுக்கின்றனர். கூட்டாக ஒன்று சேர்ந்து பாடங் களைப் படிக்கின்றனர். படிப்பு முடிந்ததும் இரவு உணவை உம்மாவின் வீட்டிலேயே  முடித்துவிட்டு அங்கேயே உறங்கிவிடுகின்றனர். காலையில் தான் தங்களின் வீட்டுக்குத் திரும்புகின்றனர். ஒரு கம்யூன் வாழ்வைப் போல கல்வி  கற்றல் அரங்கேறுகிறது.  

குழந்தைகள் கல்வி கற்பதற்காக நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை குண்டம்குழி பஞ் சாயத்து முன்னெ டுத் துள்ளது. அதன் படி  பொதுமக்கள் தங்கள் வீடுகளையோ அல்லது வேறு கட்டடங் களையோ குழந்தைகள் படிப்பதற்காக ஒதுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைந்து  முழுமூச்சாக இயங்கிக் கொண்டிருப்பவர் தான் மிசிரியா உம்மா. அவரின் வீட்டுக்குத் தினமும் பத்து மாணவிகள் படிப்பதற்காக வருகின்றனர். அவர்கள்  எல்லோரும் மிசிரியாவின் மகளுடன் படிப்பவர்கள்.

அந்த மாணவிகள் இரவு உணவுக்காக மளிகைப் பொருட்களையும் கொண்டு வருகின்றனர். சமையல் செய்வதிலும் பங்கு பெறுகின்றனர். அந்தக்  குழந்தைகளின் பெற்றோர்களும் இதற்கு முழு ஆதரவைத் தருகின்றனர். மிசிரியாவின் கணவரும், மகளும் அவரின் முயற்சிக்கு பெருந் துணையாக  இருக்கின்றனர். ‘‘நல்ல சூழலில் சக மாணவி களுடன் இணைந்து படிப்பது கற்றல் திறனை மேம்படுத்துகிறது. அவ்வப்போது ஆசிரியர்களும் வீட்டுக்கு  வந்து குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக் கின்றனர்...’’ என்று நெகிழ்கிற மிசிரியா பத்தாவது வரை மட்டுமே படித்தவர் என்பது இதில்  ஹைலைட்.