எமோஜி வீடு



சற்றும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு பெரும் வைரலாகிவிடும். அப்படி வைரலான ஒரு சம்பவம் இது. மன்ஹாட்டன் கடற்கரையில் உள்ளது அந்த வீடு.  அதன் வெளிப்புறச் சுவரில் எமோஜி ஓவியத்தை வரைந்து வைத்துள்ளார் வீட்டின் சொந்தக்காரர். அதை ஒருவர் புகைப்படமெடுத்து ‘எமோஜி வீடு’  என்ற தலைப்பில் இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது அந்த வீடு.