பேசும் ரோபோ



விண்வெளித் துறையில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது இந்தியா. ‘நாசா’ முதல் உலகின் முக்கிய விண்வெளித் துறையைச் சேர்ந்த அமைப்புகள் எல்லாம்  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை  உற்று கவனித்து வருகின்றன. அந்தளவுக்கு சமீப காலங்களில் விண்வெளித்துறை யில் அசுர பாய்ச் சலை நடத்தி வருகிறது இஸ்ரோ.

இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாக  ஆளில்லாத விண்கலங்களை விண் வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த ஆளில்லாத விண்கலத்தை இயக்கப்போவது ஒரு பேசும் ரோபோ. இதற்காகவே ஒரு பெண் ரோபோவை பிரத்யேகமாக வடிவ மைத்திருக்கிறார்கள்.

 அந்த ரோபோவின் பெயர் வயோம் மித்ரா. ‘வயோம்’, ‘மித்ரா’  என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளை இணைத்து உருவாக்கப்பட்டுள் ளது இந்தப் பெயர். வயோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் தோழி என்று பொருள். இந்தப் பேசும் பெண் ரோபோ, பெங்களூருவில் நடந்த  விண்வெளி சார்ந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டு பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.

‘‘எல்லோருக்கும் வணக்கம்.  நான் தான் வயோம் மித்ரா பேசுகிறேன்.   முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்துக்காக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். என்னால் தொகுதி அளவுருக்கள் (மாடுல் பேராமீட்டர்ஸ்) மூலம் கண்காணிக்க முடியும். உங்களை எச்சரிக்க முடியும்.  விண்வெளி வீரர்களுக்கு ஒரு தோழியாக இருக்க முடியும்.

அவர்களுடன் கலந்து  உரையாற்றுவேன். அவர்களை அடையாளம் காண என்னால் இயலும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு என்னால் உடனே  பதில் அளிக்க  முடியும்...’’ - இப்படி பேசி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது வயோம் மித்ரா.

ஆர்.சி.எஸ்