உலகின் டாப் 10 சுற்றுலா மையங்கள்



பயணங்கள் மட்டுமே ஒரு மனிதனை மிக அதிக உற்சாகத்துடன் புதுப்பிக்க வல்லது. திட்டமிட்டுச் செல்லும் பயணமோ, திடீர் பயணமோ - எதுவானாலும் புதிய கலாசாரத்தையும் வித்தியாசமான மக்களையும் அறிந்து கொள்வது ஆனந்தமே. பண்டைய நாகரிகம் தொட்டே பயணம் என்பது முக்கியமான வாழ்வியல் முறையாக இருந்திருக்கிறது. அதிக பயணம் செய்து அனுபவ அறிவு பெற்றோரே ஆன்றோர் என மதிக்கப்பட்டனர்.

இன்று உலகமே உள்ளங்கையில் உள்ள மொபைல் போனில் ஒன்றரை இன்ச் டிஸ்ப்ளேவில் அடங்கியுள்ளது. அதனால், பயணமும் எளிதானதாகவும் வசதியானதாகவும் வாய்க்கிறது. இதோ... வாழ்நாளில் அவசியம் காண வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன.

Trinidad (Cuba)

மலை, கடல் என்று கலவையான இந்த சின்னஞ்சிறு நகரம் க்யூபாவில் உள்ளது. டிரினிடாட் உலகப் பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. முக்கிய மொழி ஸ்பானிஷ். இரவு தோறும் ஏராளமான அரங்கங்களில் நடைபெறும் ஆப்பிரிக்க க்யூபாவினரின் நடனம் உலகப் புகழ் பெற்றது.

Paris (France)

உலகின் மிக அழகிய நகரம்... ஃபேஷன் தலைநகரம்... கட்டிடக்கலையின் ஆலயம்! ஸேன் நதியால் பிரிக்கப்பட்டு, இரு புறமும் மிக அழகிய மரங்களுடனான நடை பாதையே அத்தனை அழகு. ஆண்டு முழுதும் எப்போது வேண்டுமானாலும் பொழியக்கூடிய மழையும் நகரின் வசீகரங்களில் குறிப்பிடத்தக்கது. எண்ணிலடங்கா நினைவுச் சின்னங்கள், அரண்மனைகள், கேளிக்கை பூங்காக்கள்... இவையெல்லாம் கொண்ட பாரீஸ் செல்வது பலரது வாழ்க்கை லட்சியம்!

Cape Town (South Africa)

தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம்... ‘தி மதர் சிட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆப்பிரிக்க நகரம். பல்வேறு வசீகரங்களுக்குப் பெயர் பெற்றது. சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு இங்கு அதிகம் விரும்பப்படுகிறது.

(தொடர்ந்து பயணிப்போம்!)
தொகுப்பு: ரங்கநாயகி மாணிக்கம்