ப்ரியங்களுடன்




‘நட்பு’... மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பிதழ்... ச்சோ ஸ்வீட் அண்ட் டூ ஃப்ரெண்ட்லி! - கோதை ஜெயராமன், மீஞ்சூர்., எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை., ப.மூர்த்தி,

பெங்களூரு-97., மயிலை கோபி, சென்னை-93 மற்றும் கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு-43.

‘காஷ்மீர் tஷீ கன்னியாகுமரி சமையல் 30’அசத்தல்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் லஷ்மி ஸ்ரீனிவாசன், சென்னை-24.

டிஸ்கோ சாந்தி -அனுராதா இருவருக்கிடையே இழையோடும் நட்பிழை உயிர்ப்பு!
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., அ.பிரேமா, சென்னை-68., கோவை எஸ்.வி.எஸ்.மணியன், கோவை-12 மற்றும் பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

‘நட்புங்கிறது ஒரு குழந்தை மாதிரி’ படித்தேன்... ரசித்தேன்... வியந்தேன். - ஆர்.பிரகாசம், நல்லாலம்.
‘இயல்பை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நட்பு’ யசோதாவின் வழிதான் என் வழியும் கூட!
- ஜி.சகுந்தலா, கீழ்வேளூர்.

எல்லை மீறாத நம்பிக்கைக்குரிய சந்திரா லஷ்மணின் நட்பு வளரட்டும், சந்தோஷம் பெருகட்டும்!
- ஜே.தனலட்சுமி, சென்னை-12.

மல்லிகா பத்ரிநாத்தின் இஞ்சி பதார்த்தங்கள் சூப்பர்! இஞ்சியின் அருமையையும் உணர முடிந்தது.
- ம.நிவேதா, பனைமேடு., சுகந்தா ராம், சென்னை-59 மற்றும் கீதா பிரேமானந்த், சென்னை-68.

வரலட்சுமி விரதம் முதல் விநாயகர் சதுர்த்தி வரைக்குமான விசேஷ தின விளக்கங்கள் அற்புதம்.
- கே.ராகவி, வந்தவாசி.

நரையை ஏன் மறைக்க வேண்டும்? நரையும் ஓர் அழகே!     - குமாரி சுப்பிரமணியன், திருப்பத்தூர்.

தீபா நாகராணியின் ஊஞ்சல் மனதை நினைவுகளால் லேசாக ஆடச் செய்கிறது. அமெரிக்காவில்
படிக்கும் கனவோடு இருக்கும் அனேகம் பேருக்கு வழி காட்டியது ‘ஒளிகாட்டி.’   
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன்.

வெற்றியைத் தக்க வைக்க, தோல்விகளை உடைக்க வேண்டும் என்ற தாரக
 மந்திரத்துடன் சினிமா உலகில் சிறகடிக்கும் நந்திதாவின் அம்மா பெருமைக்குரியவர்.   - பி.வைஷு, சென்னை-68.
‘பிள்ளைகளின் உடலைப் பூட்டி வைப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க முடியாது’ என்ற சுபா
சார்லஸின் வார்த்தைகள் பெற்றோருக்கு ஆரோக்கிய டானிக். - வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37.

‘பெண் டேட்டா’ தந்தவை அதிர்ச்சித் தகவல்களே!    - கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மதுமிதாவின் தினை உணவுகள் 20ம் நாவில் நீரூறச் செய்தன. உலகின் டாப் 10 அழகிய அதிசய இயற்கை வளைவுகளின் படங்கள் நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தின.
- வத்சலா சதாசிவன், சென்னை-64 மற்றும் வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘விதம் விதமா சமைக்கத் தெரிஞ்சவங்கதான் கரண்டி பிடிக்கணும்னு அவசியமில்லை. சிம்பிளான உணவுகளை சமைச்சுக் கொடுத்துக்கூட வீட்டுப் பெண்களை சந்தோஷப்படுத்த முடியும்!’ - ரொம்ப கரெக்டா சொன்னீங்க திருமுருகன் சார்.   - பேச்சியம்மாள் மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

‘ட்வின்ஸ்’ இரண்டு பேருக்கும் வித்தியாசமே தெரியவில்லை. - ராஜி குருஸ்வாமி, சென்னை-88.

புகைப்பட கார்னர் ரசனை... ‘திக் திக் நிமிடங்கள்’ படிப்பினை! ராமலஷ்மி ராஜனின் பன்முக ஆளுமை அழகு! வனிதா ஆனந்தின் மகிழ்ச்சி,
வாசிப்பவர்களுக்கும் மகிழ்ச்சி! அருவி, அணை, ஆறு மூன்றும் ஓரிடத்தில்... கொடிவேரி குதூகலம்! அரிய மூலிகைகளை அடையாளம் காட்டியது ‘ஹோம் கார்டன்’.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

டாக்டர் கமலா செல்வராஜின் கடமையுணர்ச்சியும் பொறுப்புணர்வும் பாராட்டுக்குரியவை.
- ரஜினி பாலா, சென்னை-91 (மின்னஞ்சலில்...)

மற்றும் லஷ்மி குஞ்சரம், சென்னை-26 (மின்னஞ்சலில்...)

‘பெண் டேட்டா’ படித்து மனம் கனத்தது. பயத்தையும் கவலையையும் மறக்க வைக்கும் மருந்தைத் தந்தது டாக்டர் காமராஜின் கட்டுரை. சாய்னா நெஹ்வால் பற்றிய தொடர் விறுவிறுப்பு.
- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்...)  

பாலியல் கொடுமையை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கத் தடுமாறும் பெற்றோருக்கு உதவுகிறது ‘குட் டச்... பேட் டச்...’     - உஷா முத்துராமன், மதுரை-6 (மின்னஞ்சலில்...)