பெண் டேட்டா




வன்முறை


* உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் கடுமையான தாக்குதலுக்கோ, பாலியல் வன்முறைக்கோ ஆளாகிறார்.
* இங்கிலாந்தில் இருக்கும் பெண்களில் 44 சதவிகிதம் பேர் 15 வயதுக்குள்ளாக உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
* ஐரோப்பாவிலேயே இங்கிலாந்துதான் பெண்களை மிக மோசமான வன்முறைக்கு உட்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தில்
இருக்கிறது.
* சராசரியாக 30 சதவிகிதம் பெண்கள் தங்கள் இணையாலேயே பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
* ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் கொலை செய்யப்படும் பெண்களில் 38 சதவிகிதம் பேர், அவர்களுடைய மிக நெருக்கமான இணையால் கொலை செய்யப்பட்டவர்களே!
* ‘எகிப்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளில் 99.3 சதவிகிதம் பேர் பாலியல் வன் முறைக்கு ஆளாகிறார்கள்’ என்கிறது ஐ.நா. அறிக்கை.
கொடுமை
* உலக அளவில் 13 கோடி பெண்கள் பாலுறுப்பு சிதைக்கப்பட்டு, அந்த வேதனையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் 24 ஆயிரத்துக்கும் அதிக பெண்கள் இந்த வேதனைக்கு
ஆளாகிறார்கள்.
* இங்கிலாந்து பெர்மிங்ஹாம் மருத்துவ மனையில் ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 பெண்கள் பாலுறுப்பு சிதைக்கப்பட்டு
சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள்.

திருமணம்

* இந்த ஆண்டு, உலக அளவில், 1 கோடியே 40 லட்சம் பெண் குழந்தைகளுக்கு (8 வயதுக்குக் குறைவான) பால்ய விவாகம் நடைபெறும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
* ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் குழந்தைகள் அடிமைகளாகக் கடத்தப்படுகிறார்கள். அவர்களில் 80 சதவிகிதம் பெண் குழந்தைகள்.
* இன்றைக்கும், 10 நாடுகளில் வசிக்கும் பெண்கள் சட்டபூர்வமாகவே கணவனுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
* குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்காகவே சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தி வரும் நாடுகள் 76. அவற்றில் 57 நாடுகளே பெண்கள் குடும்பத்திலும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது குற்றம் என்று சட்டத்தில் குறித்திருக்கின்றன.

வேலை... உரிமை... ஊதியம்

* இங்கிலாந்தில் ஒரே வேலை பார்க்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம்பள வித்தியாசம் 15 சதவிகிதம். சராசரியாக ஒரு பெண், தன் சக ஆண் ஊழியரை விட ஆண்டொன்றுக்கு 5 ஆயிரம் பவுண்டுகள் குறைவாகப் பெறுகிறார். பகுதி நேர வேலைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வித்தியாசம் 35 சதவிகிதத்துக்கும் அதிகம்.
* உலக அளவில் நிர்வாகத் தலைமையில் 24 சதவிகிதம் மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள்.
* ‘லண்டனில் உள்ள டாப் 100 நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் சரிசமமான இயக்குநர்கள் நிலையை அடைய இன்னும் 70 ஆண்டுகள் ஆகும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது இங்கிலாந்தின் ‘சமத்துவம் மற்றும் மனித உரிமை ஆணையம்.’
* ‘விவசாயத்தில் நிலவும் பாலியல் பாகுபாட்டைக் குறைத்து, பெண்களுக்கும் உரிய ஊதியத்தை வழங்கினால் உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 12 சதவிகிதம் குறைக்கலாம்’ என்கிறது விவசாய ஆய்வறிக்கை.
* ‘இங்கிலாந்திலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் முழுத்திறமையையும் தகுதியையும் பயன்படுத்தியிருந்தால், இங்கிலாந்து பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்திருக்கும்... ஆண்டுக்கு 1,500 - 2,500 கோடி பவுண்டுகளை ஈட்டியிருக்க முடியும்’ என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இந்தத் தொகை இங்கிலாந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான தொகையைப் போல இரு மடங்கு!

(‘தி இண்டிபெண்டென்ட்’ பத்திரிகை
தகவல்களின்படி...)