ப்ரியங்களுடன்...



‘சூப்பர் சிட்டிசன்’ என்று தனி தலைப்பிட்டு, முதியோருக்கு கௌரவம் தந்துவிட்டீர்கள். ‘வயதானால்தான் என்ன..? வானமே எல்லை’ என்பதை கூறாமல் கூறிவிட்டீர்கள்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி

மற்றும் மயிலை கோபி, சென்னை-53.

‘சீனியர் சிட்டிசன் சிறப்பு உணவு 30’ பிரமாதம்.
- மீனாட்சி கிருஷ்ணன், சின்னமனூர் மற்றும் எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடி.

‘மனசு இளமையா இருந்தா வயசு உங்களை ஒண்ணும் பண்ணாது!’ என்று கூறும் தரணியின் வார்த்தைகள் மூத்தோர் மனப்பாடம் செய்ய வேண்டிய மந்திரம்.
- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)...

பல வயதானவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும்
ஷீலு ஸ்ரீனிவாசனின் பணியை மனமாரப் பாராட்டலாம்.

- கோவை எஸ்.வி.எஸ்.மணியன், கோவை-12 மற்றும் ஜெயம் ஜெயா, காரமடை.
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் மற்றும் அவர் அம்மாவின் வாழ்க்கை ‘தாயினும் சிறந்த கோயில் இல்லை’ என்பதற்கு சிறந்த உதாரணம்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

முதியோரை தூங்க வைக்க பல வழிகளைச் சொல்லி அசத்திவிட்டார் கீதா அஷோக்.  - அ.பிரேமா, சென்னை-68.

எழுத்தாளர் முபீன் சாதிகாவின் ‘என் ஜன்னல்’ புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியது.
- ராஜி மனோகரன், மதுரை-4.

தம்பதிகளே ‘லவ் பண்ணுங்க... லைஃப் நல்லாயிருக்கும்’ உண்மை மருத்துவர் காமராஜ்!
- பி.கீதா, சென்னை-68 மற்றும் பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.

சக்தி எங்கும் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறது என்று புரிய வைத்திருக்கிறார் யோகா சாம்பியன் நானம்மாள்.
- வத்சலா சதாசிவன், சென்னை-64., கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.,

ராஜி குருஸ்வாமி, சென்னை-88 மற்றும் பி.வைஷ்ணவி, சென்னை-68.

நானம்மாள் பாட்டி யோகா செய்யும் படங்களை ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்தோம். அதில் பாதியையாவது நம்மால் செய்ய முடியுமா என்கிற ஏக்கம் ஏற்பட்டுவிட்டது.
- உஷா முத்துராமன், மதுரை-6 (மின்னஞ்சலில்)...

‘என் சமையலறையில்’ பகுதியில் வாசகிகளின் டிப்ஸ் அத்தனையும் எக்ஸலன்ட்!
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘ஒரு போராளியாக இருப்பதே இந்தப் பூமியில் நாம் வாழ்வதற்கான வாடகை’ என்று சொன்ன ஆலிஸ் வாக்கர் நீடூழி வாழ பிரார்த்திக்கிறோம்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

சுசேதா கிருபளானி குறித்த தகவல்கள் அருமை.          
 - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது அ.வெண்ணிலாவின் ‘சாயுங்கால மனிதர்கள்’.

- ஜே.தனலட்சுமி, சென்னை-12 மற்றும் பத்மா மணி, சென்னை-89 (மின்னஞ்சலில்)...

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்ற பழமொழியை சாய்னா நெஹ்வாலுக்குச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
- சுகந்தா ராம், சென்னை-59.

ஆரோக்கியப் பெட்டகத்தில் ‘முத்துகள்’ அடங்கிய வெண்டைக்காய் இடம் பெற்றதில் வியப்பே இல்லை. ‘பிரசவ மருந்தில்’ தொழில் தொடங்கலாம் என்பது புதுமைத் தகவல். தீபா நாகராணி ‘வாசிப்பு வாசம்’ மறக்க முடியாத பக்கங்கள். ‘ஹோம் கார்டன்’, வியக்க வைத்துவிட்டது. ’பெண் டேட்டா’ வருத்தத்தை வரவழைத்தது. ‘கொங்கு ராகி களி’ அட்டகாசம்.
  எஸ்.வளர்மதி, கொட்டாரம்.,

லட்சுமி சீனிவாசன், சென்னை-76 மற்றும் குமாரி சுப்பிரமணியன், திருப்பத்தூர்.

‘பாதுகாப்பான பள்ளி வாகனம் சாத்தியம் இல்லையா?’ கட்டுரை நமக்கு குழந்தைகளைப் பாதுகாப்பதில் இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்த்தியது.              - பிரதிபா ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.