ப்ரியங்களுடன்



தீபாவளி சிறப்பிதழ் பலே! ‘தீபாவளி மத்தாப்பு’ கட்டுரைகள் அத்தனையும் அட்டகாசம்!

- வைஷ்ணவி ராஜா, சேலம்-4 மற்றும் அபிராமி ராஜேந்திரன், சென்னை-24.
தீபிகா படுகோனின் கடிதம் அவரது வேதனையை படம் பிடித்துக் காட்டுகிறது. டான்ஸர் ஆனந்தாவின் மனோ தைரியத்துக்கு ஈடு இணை இல்லை. குணசுந்தரி போன்றவர்களை வெளி உலகுக்கு அடையாளம் காட்டிய தோழி நீ வாழி! டாக்டர் ப்ரித்திகா சாரி தன் ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டவற்றை வெளிப்படுத்துவது அவருடைய பரந்த மனதைக் காட்டுகிறது. ‘பழமை + புதுமை ஸ்வீட்ஸ் 30’ அத்தனையும் இனிப்பு.

- சுகந்தா ராம், சென்னை-59., கோதை ஜெயராமன், மீஞ்சூர் மற்றும் வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)...  

பக்கத்துக்குப் பக்கம் ரசிக்கவும் இணைப்பு மூலமாக பல வகை உணவுகளை ருசிக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது தோழி. டீன் ஏஜ் குழந்தைகள் உடல் மாற்றங்களை புரிந்து கொள்வதற்காக இணையதளம் நடத்தும் அதிதி குப்தாவுக்கு ஹேட்ஸ் ஆஃப்!

- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில் மற்றும் பானு

பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...  
அன்பான அம்மா, அழகான, அக்கறையான மனைவி, பொறுப்பான அக்கா, பாசமான பெண் குழந்தை என பெண்களால் சூழப்பட்டு, சந்தோஷத்தில் திக்கு முக்காடும்
அபிஷேக் பச்சன், பெண்மையை மதிக்கும் உயர்ந்த மனிதர்!

- பி.வைஷ்ணவி, சென்னை-68.
ரோஹினியும் ராதிகாவும் கொடுக்கும் ‘அனிமல் அசிஸ்டெட் தெரபி’ வியக்க வைத்தது.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘உயில் எழுதிவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என்ற மூட நம்பிக்கையை உடைத்து, அதன் அவசியத்தையும் பாதுகாப்பையும் விளக்கியது - சட்டம் உன் கையில்!

- ஜே.தனலட்சுமி, சென்னை-12 மற்றும் வத்சலா சதாசிவன், சென்னை-64.
‘தெரு மனிதர்கள்’ நாம் தொலைத்த சந்தோஷங்களை மலரும் நினைவுகளாக்கியது.

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37., மயிலை கோபி, சென்னை-83.,
சி.எஸ்.சஞ்ஜனா, தென் எலப்பாக்கம் மற்றும் கீதா பிரேமானந்த், சென்னை-68.
டாக்டர் ரிபப்ளிகாவின் புதிய சேவை மகத்தான சேவை.

- அ.பிரேமா, சென்னை-68.
வெளிநாட்டுப் பெண்கள் அடுத்தவர் நலனில் அக்கறையற்றவர்கள் என்ற பார்வையை நொறுக்கி, வியக்க வைத்திருக்கும் கேதி வாக்லிங்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

- என்.ஜெயம், காரமடை.
மேகா விஸ்வநாத்தின் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும்.

- ஆர்.ஜே.சுஜாதா, சென்னை-12.
சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம் மற்றும் ரஜினி பாலா, சென்னை-91 (மின்னஞ்சலில்)...
இனிமையான நினைவுகளை கணவனும் மனைவியும் அசைபோடும் போது கிடைக்கும் சுகமே அலாதி. அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் மருத்துவர் காமராஜ். ஆரோக்கியத்தில் பூண்டின் பங்கை ‘ஆரோக்கியப் பெட்டகம்’ அழகாக உணர்த்தியது.

- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.
‘அங்கிள் டாம்’ஸ் கேபின்’ எழுதிய ஹரியத் பீச்சர் ஸ்டோவ் பற்றி படித்தோம்... வியந்தோம்.

- சுகந்தி நாராயண், சென்னை-39.
தீபா நாகராணியின் ஆங்கிலம் பற்றிய கட்டுரை வெகு சுவாரஸ்யம். ‘ட்வின்ஸ்’ல்
பிரணதியின் டிப்ஸ் நன்று. ‘எல்லாம் தெய்வச் செயல்’ என்பதை உணர வைத்தது பியா படுகோனின் அனுபவம். கதை போல சுபா சார்லஸ் போன்ற மருத்துவர்கள் சொன்னால்தான் இக்காலப் பெற்றோருக்கே சில விஷயங்கள் புரிகின்றன.

- ராஜி குருஸ்வாமி, சென்னை-88., பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்., கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி மற்றும் கே.எல்.புனிதவதி, கோவை-17.
’ஸ்டார் ஸ்டோரி’ உத்வேகம்! ‘ஹோம் கார்டன்’ சிறப்பு! ‘ஹோம் ஸ்கூலிங்’ வியப்பு!

- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.