ப்ரியங்களுடன்



‘நிதி சிறப்பிதழ்’ அருமை. நிர்வாகத்துக்கு வழிகாட்டும் தோழிகள் குறித்த ஒவ்வொரு கட்டுரையும் அட்டகாசம். ‘ஆரோக்கிய உணவுகள் 30’ ஆரோக்கிய வழிகாட்டி.
- ரேணுகா வினோத், சென்னை-54.

அதிதி கோத்தாரி, பெண்களுக்குக் கொடுக்கும் பொருளாதார கவுன்சலிங் நாடெங்கும் நடந்தால் நல்லது.
- விஜயா ராதாகிருஷ்ணன், சென்னை-64.

மதன் கார்க்கி, கபிலன், அம்மா பொன்மணி மூவரும் கவிதைகளாகவே வாழ்கிறார்கள். ‘நான் இங்கு மரமானேன்... நீதானே விதைத்தாய் அம்மா!’ இதை விட அம்மாவுக்கு உயர்ந்த இடம் அமையாது.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் ஜானகி மணிவேல், கபிஸ்தலம்.

நல்லுறக்கம் கொள்ள சிசுவுக்கு நல்லம்மையின் தாலாட்டு சி.டி. ஒரு கலியுக வரம். குழந்தைகளை அபகரித்துச் செல்வோரின் கொடூரமான செயல்பாட்டை விவரித்த அலர்ட் பக்கங்கள் ஐந்தும் நம் அத்தனை ஐயங்களையும் நீக்கின.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி-7.

‘அறைக்குள் அழகுச் செடிகள்...’ பா.வின்சென்ட்டின் கட்டுரை அற்புதம்.
- மயிலை கோபி, சென்னை-83.

‘உலகின் டாப் 10 பாடகிகள்’ பற்றிய தகவல்கள், இனிமை.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘வார்த்தை ஜாலம்’ பகுதியில் புதுப்புது வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அழகாக அறிமுகப்படுத்தி, அசத்தி வருகிறார் தீபா ராம். அம்பானியின் பொன்மொழிகளைப் பின்பற்றினாலே போதும்... நம் கனவும் நனவாகும் என்று தோன்றுகிறது. டாக்டர் காமராஜ் சொன்ன கருத்துகளைப் பின்பற்றினால் தம்பதிகள் இனிமையான சியர் லீடர்ஸ்தான்!
 - மகாலட்சுமி சுப்ரமணியன், புதுச்சேரி-9.

நதியைக் காக்கப் போராடும் சத்திய சுந்தரியின் தொண்டுள்ளம் பாராட்டத்தக்கது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தீபா நாகராணியின் ‘ஆஹா... என்ன ருசி!’யைப் படித்தவர்கள் நிச்சயம் இலையில் உணவை வீணடிக்க மாட்டார்கள். ‘ட்வின்ஸ்’ பகுதியில் ராமலட்சுமியின் நெகிழ்ச்சி எங்களையும் பற்றிக் கொண்டது.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.

நம் தலைமுறைக்காக நம் கதையை நாமே எழுத வேண்டும் என்ற உண்மையை ஆழமாகப் பதிய வைத்தது அ.வெண்ணிலாவின் ‘ததும்பி வழியும் மௌனம்.’ அனைத்துக் கொடிய உயிரினங்களிடமும் கூட அன்பு உண்டு என்ற உண்மையை உலகத்துக்கு உணர்த்திய ஜாய் ஒரு பெண் சிங்கமே!
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில். 

டாக்டர் சுபா சார்லஸ் ஆழமான கருத்துகளைக் கூட எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.
- எஸ்.சாந்தி, சென்னை-45.

‘ஸ்டெப் பை ஸ்டெப்’ எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரெசிபிகளின் அணிவகுப்பு. சபாஷ்!
- கௌசல்யா கோவிந்தன், ஸ்ரீரங்கம்.

‘நீங்கதான் முதலாளியம்மா’ தன்னம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு தொடரே!
- அம்சவேணி மோகன்ராம், மதுரை-3.

வீட்டுத் தோட்டம் வளர்ப்பது, அதுவும் மாடியில் வளர்ப்பது எவ்வளவு பலன்களைத் தரும் என்பதை கனகராஜின் வார்த்தைகளில் அறிந்து கொண்டோம்.
- லதா நடராஜன், தஞ்சாவூர்-1.

சாய்னாவின் ‘ஸ்டார் ஸ்டோரி’ அவருடைய ஆட்டத்தைப் போலவே அசத்தல். மஞ்சள் பூசணி... மகிமை! பார்கவி மணியின் படங்கள் கலைநேர்த்தி!
- வேதவல்லி கிருஷ்ணன், திருநெல்வேலி-2.