யூத் கிச்சன்



கார்ன் சீஸ் பராத்தா

எவ்வளவு நேரம்?

30 நிமிடம்.

எத்தனை?

5 பராத்தா.

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் - 1/2 கப்
துருவிய சீஸ் - 1/2 கப்
மிளகாய் தூள் -  3/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 சிட்டிகை
எண்ணெய்  - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை மிருதுவாக பிசைந்து கொள்ளவும். மூடி வைக்க வும். கார்னை வேக வைத்து முத்துகளாக எடுத்துக் கொள்ளவும். கார்ன்  முத்துகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, சீஸ், சாட் மசாலா, மிளகாய்  தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவை 5 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சிறிய சப்பாத்தி போல தேய்த்து, 1 டேபிள்ஸ்பூன் கார்ன் சீஸ் ஃபில்லிங்கை வைத்து மூடி விடவும்.

ரொம்ப அழுத்தம் கொடுக்காமல் சிறிது கனமான பராத்தாவாக இட வும். தோசைக்கல் சூடானவுடன் இட்ட பராத்தாவை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறம் ஆனவுடன், சிறிது எண்ணெய் விட்டு எடுக்கவும்.  சுவையான கார்ன் சீஸ் பராத்தா தயார்! அப்படியே சாப்பிடலாம். தேவையானால் தயிர் தொட்டுக் கொள்ள லாம்.