பை... பை... பிளாஸ்டிக்



தினமும் ஏறக்குறைய 250 டன்னுக்கும் குறையாத பிளாஸ்டிக் கழிவுகள் பெரு நகரங்களில் உருவாகின்றன. பிளாஸ்டிக் பைகளை நாம் உபயோகப்படுத்துவது சில நிமிட அல்லது மணித் துளிகள். ஆனால் மக்கிப் போக எடுக்கிற காலமோ... நூறு ஆண்டுகள்! நிலத்தில் மட்டுமல்ல... கடலிலும் 90% பிளாஸ்டிக்குகள்தான். ஏன் போன வெள்ளப்பெருக்கில் அடைத்துக் கிடந்த நெகிழிப் பைகளை மறக்க முடியாதே!

ஒரு பிளாஸ்டிக் பை மக்கிப் போக எடுத்துக் கொள்ளும் காலம்... 100 வருடங்களை தாண்டலாம். பயோ டிகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் மக்கிவிட 60-180 நாட்கள். துணிப்பைகள், கிழிந்த பருத்தி துணிகள் 1-5 மாதங்கள். நைலான் துணிகள் 30-40 வருடங்கள். டயபர்ஸ் நாப்கின்கள் 500-800 வருடங்கள். அலுமினியம் கேன்கள் 80-1000 வருடங்கள். தோல் பொருட்கள் 5 வருடங்கள். ஆரஞ்சு தோல் 6 மாதங்கள். வாழைப்பழத்தோல் 2-10 நாட்கள்... பிளாஸ்டிக் பாட்டில்கள் அழியவே அழியாது.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் சுமார் ஏழு சதவிகிதம் மட்டுமே ரீசைக்கிளிங் செய்யப்படுகிறது. பயோ டிகிரேடபிளில் கார்பன்-டை-ஆக்ஸைடு நீக்கப்பட்டு மட்கும் விதத்தில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை. நாம் எதை பயன்படுத்தினால் பூமியை பாதுகாக்க முடியும் என யோசித்து செயல்படுவோம்! பை! பை! சொல்வோமே பிளாஸ்டிக்கிற்கு! பூமியை காப்போமே வரும் தலைமுறைக்காக!

- ஜே.சி.ஜெரினா காந்த், சென்னை.