ப்ரியங்களுடன்...



இணையர் ஸ்பெஷலாக வந்த தோழியை பத்திரமாக பாதுகாப்பாக வைத்துள்ளேன். அப்பப்பா அவ்வளவு செய்திகள்.
- க.கலா, காகிதப்பட்டறை.

அட்டையிலேயே சாதலை அடித்து காதலை வாழ வைத்ததிலே அசத்தல். காதல் ஜோடிகளின் வித்தியாசமான பேட்டிகள் செம ஜோர்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், துரைபாக்கம்.

‘வாலன்டைன்ஸ் டே’ ஸ்பெஷல் காதலை விட அழகாய் இனித்தது.
- ஸாதியா அர்ஷத், குடியாத்தம்.

நிவேதா பெத்துராஜின் அட்டைப்படத்திற்காகவே தோழி இதழை வாங்கினேன். அத்தனை அழகு!
- என்.பாக்கியவதி, மேக்கா மண்டபம்.

‘காதல் போயின் சாதல் காதல்’ கட்டுரை எதிர்பாலின ஈர்ப்பை அறிவியல்பூர்வமாய் உணர்த்தியது.
- வி.ராஜேஸ்வரி, தேனி.

‘காதல் ஸ்பெஷல்’ சிறப்பிதழில் பல்வேறு ஜோடிகளை படம் பிடித்துக் காட்டியிருந்தது சிறப்பு.
- சி.விஜயலெட்சுமி, குண்டூர்.

இசையால் இணைந்த சுகந்தி-சுதந்திரகுமார் தம்பதியினரின் பேட்டி நெஞ்சை பதற வைத்து விட்டது.
- என்.தேவதாஸ், பண்ணவயல்.

உப்பு என்பது உப்பளங்களிலிருந்து சுத்தமாக்கப்பட்டு கடைக்கு வருகிறதென்றும்தான் அறிந்திருந்தேன். கடையில் வாங்கும் உப்பில் உப்பளப் பெண்களின் கண்ணீரின் உப்பும் கலந்திருக்கிறது என்பதை படித்ததும் கண்ணீர் வந்தது.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

நெஞ்சை உருக்கும் உப்பளப் பெண்களின் வாழ்க்கையையும் வலிகளையும் படித்த போது கண்ணீர் வந்து விட்டது.
- எஸ்.வள்ளி, அம்பத்தூர்.

அமுதா - வேலு தம்பதியர் எந்தக் குறையும் இன்றி நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன். எப்படிப்பட்ட இனிய உறவு!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் தேவிகா பற்றிய கட்டுரை சூப்பர்.
- சு.நவீனா தாமு, பொன்னேரி.

‘செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் நடிகை தேவிகாவின் யதார்த்தமான நடிப்பாற்றலை கண் முன் நிறுத்தி கண் கலங்க வைத்து விட்டார் பா.ஜீவசுந்தரி.
- எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

லவ் பேர்ட்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தும் இதுவரை அறிந்திராத புதிய செய்தி.
- ஆர்.மகாலட்சுமி, திருவான்மியூர்.

உலக காதல் திரைக்காவியக் கதைகள் படித்ததும் பிரமிப்பாக இருந்தது.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.