ஷாப்பிங்-என்ன வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?



பச்சையப்பாஸ் சில்க்ஸ்

அசல் காஞ்சிபுரம் பட்டுக்குப் பேர் போன பச்சையப்பாஸ் சில்க்ஸ் கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கும் பழமையான  பாரம்பரியம் கொண்டது. அதன் சென்னை கிளையான தி.நகர் பனகல் பார்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் அத்தனையும் பட்டு. பட்டில் எத்தனை ரகம்  உண்டோ அத்தனையும் நம்ப முடியாத வகையில் வேறெங்கும் கிடைக்காத விலையில் இங்கே கிடைக்கிறது.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப பொருந்தும் வகையில் பலவிதமான ரகங்கள் உள்ளன. தனிப்பட்ட டிசைன்களுக்கும் கஸ்டமர் சேவைக்கும்  பெயர் பெற்றது பச்சையப்பாஸ் சில்க்ஸ். இங்கே பெண்களுக்கு பட்டுப்புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார் மெட்டீரியல் ரகங்களும் கிடைக்கும்.  ஆண்களுக்கும் பட்டு வேட்டி, சட்டை, துண்டு, குழந்தைகளுக்கு பாவாடைச் சட்டை ரகங்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்துப் பட்டு  வகைகளும் இங்கே கிடைக்கும்.

ராம்ராஜ்

நம் இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பேசும் எக்ஸ்குளூசிவ் வேட்டி சட்டைகளுக்கு பேர் போனது ராம்ராஜ் நிறுவனம். தீபாவளி திருநாளை  உற்சாகத்துடன் கொண்டாட ராம்ராஜின் ரம்மியம் பெண்களுக்கான அமோகா டாப் சிலிப்ஸ், பெட்டல்ஸ் அட்சஜபிள் சிலிப்ஸ். சியர்ஸ் மற்றும் மெர்சி  ப்ளைன் சிலிப்ஸ் போன்று பல உள்ளாடை ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பட்டுப் போன்ற இந்த  உள்ளாடை ரகங்கள் கம்பெனி ஷோரூம் மற்றும் பல முன்னணி நிறுவனங்களிலும் கிடைக்கும்.

ஆர்.எம்.கே.வி

அழகான பட்டுப்புடவைகளுக்குப் பேர் போன ஆர்.எம்.கே.வி புத்தம் புதிய கலெக்  ஷன்களின் மூலம் இன்றைய அதிநவீன மகளிருக்காக பாரம்பரிய  பட்டுப்புடவைகளுக்கே புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய லினோ லைட் பட்டுகள், நாலு விதமாக அணியக்கூடிய  ரிவர்ஸிபல் பட்டுப்புடவைகள், ஆப்டிக்கல் ஆர்ட் அடிப்படையில் வர்ண ஜால பட்டுப்புடவைகள் என பட்டு உலகில் பல புதுமைகளை ஆர்.எம்.கே.வி  செய்து வருகிறது.

வழக்கமான ரவிக்கைகளுக்குப் பதிலாக ஷ்ரக் மற்றும் கேப்ஸ் மிக அழகாய் அணி வகுக்கின்றன. பாரம்பரியமும் சரியாக இணைக்கப்பட்டு புதிய  தொழில்நுட்ப வகைகளை புகுத்தி பிரம்மாண்டமான, தனித்துவமான ஆடைகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகிறது. நமது பழைய பாரம்பரிய  கலைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் நீடித்த உழைக்கும் துணி வகைகள் மற்றும் சிறந்த வண்ணங்களையும் புதுமைமிகு ஆடைகளின் கலெக்  ஷன்களை ஆர்.எம்.கே.வி வழங்குகிறது.

ஜுவல் ஒன்

இந்த தீபாவளிக்கு ஜுவல்ஒன் பெண் குழந்தைகளுக்கான புதிய வகை ஆபரணத் தங்கத்தை அறிமுகப்படுத்துகிறது. ‘நகாஷ் ஆன்டிக்மேளா’ அக்டோபர்  19ம் தேதி முதல் இதனை அறிமுகம் செய்கிறது. இதுவரை யாரும் பார்த்திடாத மாடலில் பல்வேறு டிசைன்களில் கண்கவரும் வகையில்  அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த தீபாவளியை நகாஷ் ஆன்டிக் மேளாவுடன் கொண்டாடுங்கள்.

போத்தீஸ்

சின்னஞ்சிறு தேவதைகளுக்கு வண்ணமிகு நவரத்தின பட்டுப் பாவாடைகள். நவரத்தின கலெக்ஷன் தனித்துவமான நவரத்தின பட்டுப் பாவாடைகள்,  பண்டிகைக் காலத்திற்கான போத்தீஸின் பிரத்யேக படைப்பாகும். வீட்டுச் செல்லங்களுக்கு நவரத்தி னாவை அணிவித்து தேவதையாக்குங்கள்.

உதயம் வேட்டிகள்

தரமான உடைகளை நியாயமான விலையில் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட பீரீமியம் காட்டன் வேட்டிகள் மற்றும் சட்டை நிறுவனம், பிரபல  தென்னிந்திய திரைப்பட நடிகர் அர்ஜுன் அவர்களை பிராண்ட் அம்பாசிட்டராகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தங்களது தயாரிப்புகளான வெள்ளை  வேட்டி, சட்டைகள், மேட்சிங் பார்டர் வேட்டி-சட்டைகள், இரண்டு கரைகளைக் கொண்ட U-Turn வேட்டிகள், திருமண வைபவங்களுக்கு  மணமகன்களுக்கான வேட்டி-சட்டை செட்டுகள், இளைஞர்களுக்காக பல வண்ணங்களில் லினென் காட்டன் சர்ட்டுகள், பாக்கெட் வெல்குரோ வேட்டிகள்,  சிறுவர்களுக்கான வேட்டி சட்டைகள், குர்த்தா & வேட்டிகள், உள்ளாடைகள் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் கிடைக்கும்.  பாரம்பரிய வேட்டி-சட்டைகள் அணிந்து ஒளிமிக்க தீபாவளியைக் கொண்டாடுவோம்.

சுந்தரி சில்க்ஸ்

இந்த தீபாவளியை முன்னிட்டு 8 லிருந்து பத்து வகையான வண்ணமயமான சில்க் புடவைகளை அறிமுகப்படுத்துகிறது சுந்தரி சில்க்ஸ். வேறு எங்கும் கிடைக்காத டிசைன்கள், எம்ப்ராய்டிங் வடிவமைக்கப்பட்டுள்ள சில்க் புடவைகள் தீபாவளி பண்டிகையில் உங்களை அலங்கரித்து அழகூட்ட வந்திருக்கிறது. பெண் குழந்தைகளுக்கான சுடிதார், சல்வார்,  எப்போதும் கிடைக்கும் டிசைன்களில் கிடைப்பது மட்டுமல்லாமல், சுந்தரி சில்க் கைவண்ணத்தில் ரெடிமேட் சாரிஸ் இந்த தீபாவளிக்கு அறிமுகமாகிறது. சுந்தரி சில்க்ஸ் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையான தரமான துணிவகைகளை இந்த ஆண்டும் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

MB பேஷன்ஸ்

சேலத்தில் இயங்கி வரும் மொத்த விற்பனையாளர்களான எம்.பி. பேஷன்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்காக பெண் குழந்தைகளுக்கு கனகதாரா பிரான்ட் பட்டுப் பாவாடை சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் டிரெடிஷனல் கலந்த பேன்ஸியான பட்டுப்பாவாடைகள், தாவணி பாவாடை சட்டை மற்றும் அப்படியே அணியக் கூடிய குழந்தைகளுக்கான ரெடிமேட் சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரெடிமேட் சேலைகள் குழந்தைகள் அப்படியே அணிந்துகொள்ளுவதற்கு ஏற்ற வடிவில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் உள்ளது. இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் வீட்டு சுட்டிப் பையன்களுக்கு தங்கமகன் பிராண்டில் இரண்டு பக்கமும் அணியக்கூடிய டபுள் ஷேட் ஷர்ட்ஸ், ஷர்ட் கலரில் இடம் பெற்றுள்ள கரையுடன் கூடிய வேஷ்டிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.