ப்ரியங்களுடன்…



*சின்னத்திரை ஹரிதா சாது பேட்டி படித்தேன். சண்டை போட்டாலும் தம்பிதான் என் பெஸ்ட் ஃபிரெண்ட். அது மட்டுமல்ல என்னுடைய ரோல் மாடல் என் தம்பிதான் என்று மனம் திறந்து கூறியது ரியலி தி கிரேட். ‘10 நிமிடத்தில் சிறு தானிய உணவுகள் சமையல்’ படிக்கவே வியப்பாக இருந்தன.
- வண்ணை கணேசன், சென்னை.

*சாக்லெட்டில் ‘தஞ்சாவூர் பெரிய கோவில்’!  பற்றிய செய்திக் கட்டுரை இனிப்பாக இருந்தது.
- வெ. லட்சுமி நாராயணன், வடலூர்.

*நாம் உடுத்தும் உடைகளை தேவையான அளவு மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும், குறைந்தது 30 தடவையாவது உடுத்த வேண்டும் என்று ஃபேஷன் டிசைனர் வினோ சுப்ரஜாவின் கூற்றை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- ஆர். நிர்மலாஜோதி, தூத்துக்குடி.

*இனி திருமணமான பெண்களும், குழந்தை பெற்ற இளம் பெண்களும் மிஸ்யூனிவர்ஸில் கலந்து கொள்ளலாம் என்ற செய்தியை தாங்கி வந்த நியூஸ் பைட்ஸின் செய்திகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.
- அமலா அல்போன்ஸ், நெல்லை.

*ஜெயிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா 30 பேரு என்ன? நூறு பேருக்கும் எளிதாக சமைத்து விடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் திருவண்ணாமலையின் ஆச்சி மெஸ் உரிமையாளர்கள் ஜீவா, வைத்தீஸ்வரன் தம்பதியினரின் கடின உழைப்புதான் அவர்களை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
- ஜி. பரமேஸ்வரி, தூத்துக்குடி.

*நாடக உலகில் சிந்திக்கத் தூண்டுகிற புதிய முயற்சியாய் உருவாக்கப்பட்டு நடந்த ‘கோமாளிகள்’ நாடகம் பற்றிய கட்டுரை அதில் பங்கு பெற்ற கலைஞர்களின் திறமையை பறை சாற்றியதுடன் அந்த புதுமை நாடகத்தை அரங்கில் அமர்ந்து கண்டு ரசித்த உணர்வை ஏற்படுத்தியது.
- த. சத்தியநாராயணன், சென்னை.

*‘நலம் காக்கும் சிறுதானியங்கள்’ பகுதியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘கம்பு’ தானியத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி படித்தறிந்ததும், எங்களின் உடலும், மனமும் மிகவும் ‘தெம்பு’ அடைந்தன.
- கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி.

*போராட்டமான வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும், ஏமாற்றங்களையும் சகித்துக் கொண்டு தான் யார் என்பதை
நிரூபித்திருக்கும் வித்யாவின் சாதனை அளப்பரியது.
- ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

*கிரவுட் பண்டிங் நிறுவனர் அழகாக விளக்கியுள்ளார். பலருக்கும் இது பயன்படும். தோழி வாயிலாக அறிந்தோம். நன்றி.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

அட்டைப்படம்: திவ்யா, படங்கள்: ஆ.வின்சென்ட்பால்