லாரன்ஸ் ரோட் கி டிக்கி



என்னென்ன தேவை?

மட்டன் கொத்துக்கறி - 500 கிராம்,
வெங்காயம் - 150 கிராம்,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்,
நெய் - 50 கிராம்,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
முட்டை - 2,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
தயிர் - 80 கிராம்,
புளி சட்னி - 4 டேபிள்ஸ்பூன்,
புதினா சட்னி - 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குக்கரில் மட்டன் கொத்துக்கறி, கடலைப்பருப்பு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி தவாவில் நெய் சேர்த்து இரண்டு பக்கம் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். மேலே தயிர், புளி சட்னி மற்றும் புதினா சட்னியுடன் அலங்கரித்து பரிமாறவும்.