ராகி சேமியா கட்லெட்



என்னென்ன தேவை?

ராகி சேமியா - 100 கிராம்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 4,
துருவிய கேரட் - 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,
வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும். ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, மைதா கரைசலில் முக்கி, ராகி சேமியா பொடித்ததில் போட்டு பிரட்டி, சூடான தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகும்வரை சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.