லெமன் சேமியா பிடி கொழுக்கட்டை



என்னென்ன தேவை?

லெமன் சேமியா - 1 பாக்கெட்,
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்,
துருவிய கேரட் - 1,
நறுக்கிய குடைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் விட்டு லெமன் சேமியாவை பாதிப் பதமாக வேக விட்டு வடித்துக் குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இறக்கி, அதில் வேகவைத்த லெமன் சேமியா, துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து, கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.