வரகு சேமியா தால் ஊத்தாப்பம்



என்னென்ன தேவை?

வரகு சேமியா - 100 கிராம்,
பச்சரிசி - 100 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய வெங்காயம் - 1.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
பச்சைமிளகாய் - 4,
நெய், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வரகு சேமியாவை சிறிது சுடுநீரில் மூழ்குமாறு 2 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவிட்டு வெங்காயம், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து, ஊறிய வரகு சேமியாவை கலந்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து கொட்டி நன்கு கிளறவும். சூடான தவாவில் சற்றே கனமான ஊத்தாப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.