கோதுமை சேமியா கிச்சடி



என்னென்ன தேவை?

கோதுமை சேமியா - 200 கிராம்,
நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,
கறிவேப்பிலை - 10.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் கோதுமை சேமியா சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கவும். பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.