மிக்ஸட் தால் வரகு சேமியா வொண்டர்



என்னென்ன தேவை?

வரகு சேமியா - 200 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 4.

தாளிக்க...

எண்ணெய், உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 15 இலைகள்,
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பருப்புவகைகள் மற்றும் காய்ந்தமிளகாயை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் கெட்டியாகஅரைக்கவும். வரகு சேமியாவை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் தாளித்து, அரைத்த பருப்பைச் சேர்த்து வதக்கி உப்பு, உதிர்த்த வரகு சேமியாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.