வீட் சேமியா டிக்கிஸ்



என்னென்ன தேவை?

வீட் சேமியா - 100 கிராம்,
பிரெட் துண்டுகள் - 4,
மசித்த உருளைக்கிழங்கு - 1,
சோள முத்துக்கள் - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து வீட் சேமியா சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். வீட் சேமியாவுடன் எண்ணெயை தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து பிசைந்து, டிக்கிகளாக தட்டி, சூடான தவாவில் நெய் விட்டு டிக்கிகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.