வெங்காயத்தாள் சட்னி



என்னென்ன தேவை?

நறுக்கிய  வெங்காயத்தாள் - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5, புளி - பாக்கு அளவு,
தேங்காய்த்துருவல் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வதக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், புளி போட்டு நன்கு வறுத்து பின் வெங்காயத்தாளையும் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். பார்ப்பதற்கு புதினா சட்னிபோல் இருக்கும். தேவையெனில் கடுகு தாளித்து சேர்க்கலாம்.