குடைமிளகாய் சட்னி



என்னென்ன தேவை?

சிவப்பு அல்லது பச்சை குடைமிளகாய் - 2,
வேர்க்கடலை - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 2,
புளி - சிறிது,
உப்பு,
வதக்க எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து பின் காய்ந்தமிளகாயை வறுத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய குடைமிளகாயை ஒரு வதக்கு வதக்கி இறக்கவும். ஆறியதும் புளி, உப்புடன் சேர்த்து அரைத்து பரிமாறவும்.