குடைமிளகாய் சாதம்



என்னென்ன தேவை?

உதிரி உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வறுத்து பொடிக்க...
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது.

தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.

எப்படிச் செய்வது?

வறுக்க கொடுத்தவற்றை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குடைமிளகாயை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து சாதம், பொடித்த பொடியை கலந்து சூடாக பரிமாறவும்.