கேரட் துவையல்



என்னென்ன தேவை?

கேரட் துருவல் - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4, புளி - பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு, விரும்பினால் நறுக்கிய இஞ்சி - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.