கேரட் கோஸுமல்லி



என்னென்ன தேவை?

கேரட் சீவியது - 1 கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
தாளிக்க கடுகு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கேரட் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.