காலிஃப்ளவர் பராத்தா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு -  2 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
காலிஃப்ளவர் துருவியது - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலிஃப்ளவர், அனைத்து மசாலாத்தூள்கள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டி நடுவில் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.