டர்னிப் பொரியல்



என்னென்ன தேவை?

நறுக்கிய டர்னிப் (நூக் கோல்) - 1 கப்,
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவைக்கு.

தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை தாளித்து டர்னிப் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.