கேபேஜ் ரைஸ்



என்னென்ன தேவை?

முட்டைகோஸ் துருவல் - 1 கப்,
உப்பு - தேவைக்கு.

அரைக்க...
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிது,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு.

தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சைவாசனை போக நன்கு வதக்கி முட்டைகோஸ் துருவல், உப்பு போட்டு வதக்கி ஆறிய உதிரியான சாதத்துடன் கலந்து பரிமாறவும்.