கேரட் கீர்



என்னென்ன தேவை?

கேரட் - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
பால் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?


கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு வேகவைத்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.