கொண்டைக்கடலை உருண்டை



என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை - 1 கப்,
பூண்டு - 5 பல்,
மல்லித்தழை, வெங்காயத்தாள் - தலா 1 கைப்பிடி,
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 1/4 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை  இரவு முழுவதும் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து பூண்டு, மல்லித்தழை,  வெங்காயத்தாள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பிரெட் தூள், ஆப்ப  சோடா, சீரகத்தூள் போட்டு கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின் அதை வெளியே எடுத்து முட்டை  வடிவத்திற்கு உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் மூழ்கும் அளவிற்கு போட்டு பொரித்தெடுத்து சாஸுடன்  பரிமாறவும். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.