சிக்கன் புரோக்கோலி ரோல்



என்னென்ன தேவை?

கோதுமை அல்லது மைதா சப்பாத்தி - 6,
வேகவைத்து பொடியாக நறுக்கிய சிக்கன் - 1 கப்,
சிறு சிறு பூவாக உதிர்த்த புரோக்கோலி - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
 சிவப்பு, பச்சை, மஞ்சள் குடைமிளகாய் - 1 கப்,
 பூண்டு - 4 பல், வெண்ணெய், ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
வெள்ளை குறு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சில்லி ஃபிளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, சிக்கன், புரோக்கோலி, குடைமிளகாய், உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் ஃப்ரெஷ் கிரீம் ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கவும். சப்பாத்தியில் கலவையை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.