ஹனி கேண்டி லாலிபாப்



என்னென்ன தேவை?

முழு உளுந்து - 1/4 கப்,
இட்லி அரிசி - 1 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது,
சில்வர் கலர் சுகர் பால்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
தேன் - சிறிது,
சர்க்கரை - 1 கப்,
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


அடிகனமான கடாயில் சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கம்பி பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவைக்கவும். அரிசி,  உளுந்தை 3 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். அதனுடன் பேக்கிங் சோடா, ஆரஞ்சு ஃபுட் கலர்  சேர்த்து கலக்கவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் பிரட்டி  எடுக்கவும். கீழ்புறம் குச்சி சொருகி, மேற்புறம் சிறிது தேன் தடவி மேலே சில்வர் சுகர் பால்ஸ்  தூவி பரிமாறவும்.