ஹெல்த்தி பால்ஸ் - லாலிபாப்
என்னென்ன தேவை?
சத்து மாவு - 1 கப், பொடித்த சர்க்கரை - 1/2 கப், நெய் - தேவைக்கு, டூட்டிஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன், அலங்கரிக்க ஜாம் - தேவைக்கு, காய்ந்த பூசணி விதை - 1 டீஸ்பூன், லாலிபாப் மோல்டு, ஸ்டிக்.
எப்படிச் செய்வது?
கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைந்ததும் சத்து மாவு, நெய் சேர்த்து கிளறி டூட்டிஃப்ரூட்டி, பூசணி விதை போட்டு கிளறி இறக்கவும். லாலிபாப் மோல்டில் இதை அழுத்தி கீழே குச்சி சொருகி 10 நிமிடம் கழித்து எடுத்து மேற்புறம் ஜாம் தடவி பரிமாறவும். குறிப்பு: ஜாம் வேண்டாம் என்றால் சர்க்கரையின் அளவை 3/4 கப் சேர்த்துக் கொள்ளலாம்.
|