உளுந்து பால்ஸ் லாலிபாப்



என்னென்ன தேவை?

வறுத்து பொடித்த உளுந்து மாவு, சர்க்கரை - தலா 1 கப்,
பனீர் துருவல், தேங்காய்த்துருவல் - தலா 1/2 கப்,
அலங்கரிக் க சாக்கோ சிப்ஸ், செர்ரி - சிறிது,
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை,
நெய் - தேவைக்கு,
லாலிபாப் குச்சிகள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஜாதிக்காய் பொடி கலந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில் சிறிது நெய்  விட்டு சூடானதும் கலந்த கலவையை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்ததும் பனீர் துருவல், உளுந்து மாவு, நெய் சேர்த்து மிதமான  தீயில் வைத்து கிளறி வெந்ததும் இறக்கவும். உருண்டைகளாக  பிடித்து குச்சியில் சொருகி கண் மாதிரி சாக்கோ சிப்ஸ் வைத்து அழுத்தி,  நறுக்கிய செர்ரியை வாய் பகுதியில் வைத்து அழுத்தி பரிமாறவும்.