கலர்ஃபுல் லாலிபாப்



என்னென்ன தேவை?

செர்ரி பழம் - சிறிது,
ஜெம்ஸ் மிட்டாய் அல்லது விருப்பமான கலர் மிட்டாய் - 21,
ப்ளையின் வேபர்ஸ் பிஸ்கெட் - 3,
சீஸ் கிரீம் - 1/4 கப்,
ஐசிங் சுகர் - 1 டேபிள்ஸ்பூன்,
லாலிபாப் ஸ்டிக் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சீஸ் கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து கலந்து கொள்ளவும். வேபர்ஸ் பிஸ்கெட்டில் இந்த கிரீமை தடவி, நடுவில் செர்ரி பழமும்,  சுற்றிலும் வண்ணமயமான ஜெம்ஸ் மிட்டாய்களை வைக்கவும். அடிப்பாகத்தில் ஸ்டிக் சொருகி ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து  பரிமாறவும். பார்ப்பதற்கு வண்ணப்பூக்கள் போல் காட்சியளிக்கும்.