ஸ்பைசி கார்ன் லாலிபாப்



என்னென்ன தேவை?

வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்கள், கடலை மாவு  - தலா 1/4 கப்,
பீட்ரூட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு, சோள மாவு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
 உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கிரீன் சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயம், பிரெட் தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
லாலிபாப் மரக்குச்சிகள் - தேவையானது.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பீட்ரூட் துருவ சேர்த்து வதக்கி, வெள்ளை வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக  வதக்கவும். பின் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கிரீன் சில்லி சாஸ், ஸ்வீட்கார்ன் போட்டு வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு,  சோள மாவு, உப்பு, அரிசி மாவு, வதக்கிய காய்கறி கலவை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் தெளித்து உருண்டையாகவோ, ஓவலாகவோ  பிடித்துக் கொள்ளவும். 1 டீஸ்பூன் மைதாவில் சிறிது தண்ணீர் ஊற்றி நீர்க்க குழைத்து அதில் இந்த வெஜ் உருண்டையை முக்கியெடுத்து  பிரெட் தூளில் புரட்டி ஃபிரிட்ஜில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து குச்சி சொருகி  பரிமாறவும்.