கோகனட்பால் லாலிபாப்



என்னென்ன தேவை?

முற்றிய தேங்காய்த்துருவல் - 1 கப்,
வெல்லத்துருவல், சர்க்கரை - தலா 1/2 கப்,
பீட்ரூட் துருவல் - 2 டீஸ்பூன்,
கலர் ட்ரை தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
லாலிபாப் ஸ்டிக், நெய் - சிறிது,
வறுத்து பொடித்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா - 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

அடிகனமான கடாயில் வெல்லத்துருவல், சிறிது தண்ணீர் விட்டு கரைந்ததும் தேங்காய்த்துருவல், சர்க்கரை, சிறிது நெய் விட்டு கிளறி  பீட்ரூட் துருவல், பொடித்த நட்ஸ், ஏலப்பொடி போட்டு நன்கு கிளறவும். அனைத்தும்  சேர்ந்து வெந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.  உருண்டைகளாக பிடித்து ட்ரை கலர் தேங்காய்த்துருவலில் பிரட்டி கீழே குச்சி சொருகி ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்.குறிப்பு: கலர் ட்ரை தேங்காய்த்துருவல் செய்ய... கடாயை சூடாக்கி முற்றிய தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி விருப்பமான ஃபுட் கலர்  சேர்த்து பிசறி உலர்த்தி எடுக்கவும்.