மஷ்ரூம் லாலிபாப்



என்னென்ன தேவை?

பட்டர் காளான் - 10,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
 உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கடலை மாவு - 1/4 கப்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். காளான் தவிர மற்ற பொருட்களை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி  நீர்க்க கரைத்து அதில் காளானை முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கீழே லாலிபாப் குச்சி சொருகி பரிமாறவும்.