நண்டு ரசம்என்னென்ன தேவை?

நண்டு - 250 கிராம்.

அரைக்க...


சாம்பார் வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


அரைக்க கொடுத்த பொருட்களை நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து கொள்ளவும். மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு  சேர்த்து, உப்பு  போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து  இறக்கவும். சூடாக பரிமாறவும்.