மிக்ஸ் சூப்



என்னென்ன தேவை?

வேகவைத்த (வஞ்சிரம், இறால், கனவா) - 300 கிராம்,
மஞ்சள்தூள், நறுக்கிய இஞ்சி - சிறிது,
உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி - தேவைக்கு.

அரைக்க...

பூண்டு - 4 பல்,
மிளகு, தனியா - தலா 1/2 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - 250 கிராம்,
பச்சைமிளகாய் - 3.

தாளிக்க...

நல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 5,
கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


அரைக்கக் கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி அரைக்கவும். கடாயில் வேகவைத்த மீன், மஞ்சள் தூள், இஞ்சி, அரைத்த மசாலா,  சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி உப்பு, மிளகுத்தூள்,  கொத்தமல்லி தூவி இறக்கவும்.