நெத்திலி பொரியல்



என்னென்ன தேவை?

நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 6,
பச்சைமிளகாய் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,

நெத்திலி மீன் - 1/2 கிலோ,
மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
உப்பு -  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

    
கடாயில் நல்லெண்ணெயை காயவைத்து, கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு தனியாத்தூள்,  சீரகத்தூள் வதக்கி, தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், மிளகுத்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி  பரிமாறவும்.