பிச்சி போட்ட பாறை மீன் வறுவல்



என்னென்ன தேவை?

சிறிதாக நறுக்கிய மீன் - 1/2 கிலோ.

வதக்க...

நல்லெண்ணெய் - 1/4 கப்,
சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,

இடிச்ச பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு -  தேவைக்கு.

தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க...

காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, புளி - தலா 25 கிராம்.

எப்படிச் செய்வது?

கொடுத்துள்ள தோசைக்கல் மசாலாவை வறுத்து கடைசியில் புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வதக்க  கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன் துண்டு, அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொத்தமல்லி  தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.