பூண்டு கனவா பிரட்டல்



என்னென்ன தேவை?

வெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,
செக்கெண்ணை - 25 கிராம்,
சீரகம் - 10 கிராம்,
காய்ந்தமிளகாய் - 5,
இடிச்ச பூண்டு - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு -  தேவைக்கு,
சாம்பார் வெங்காயம் - 6.

தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க...

காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு - தலா 25 கிராம்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி அரைத்த மசாலாத்தூள்,  கனவா மீன், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.