வவ்வால் மீன் வறுவல்



என்னென்ன தேவை?

வவ்வால் மீன் - 1/2 கிலோ,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
சின்ன வெங்காயம் - 6,
நறுக்கிய பூண்டு - 5 பல்,
 கறிவேப்பிலை,  கொத்தமல்லி - சிறிது,
 தோசைக்கல் மசாலா - 5 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,  உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து  பரிமாறவும்.