நல்லி எலும்புச்சாறு



என்னென்ன தேவை?

நல்லி எலும்பு - 500 கிராம்,
நல்லெண்ணெய்  - தேவையான அளவு,
இடிச்ச சின்ன வெங்காயம் -3,
இடிச்ச பூண்டு - 1,
பச்சைமிளகாய் - 5,
தக்காளி- 2,
கறிவேப்பிலை, உப்பு சிறிது.

அரைக்க...


மிளகு -1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
பட்டை -1,
கிராம்பு - 5.

எப்படிச் செய்வது?

முதலில், எண்ணெய் விட்டு அதில் வெங்காயம்,தக்காளி, பூண்டு,பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் நல்லி எலும்பை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.