மட்டன் சுக்கா
என்னென்ன தேவை?
வேகவைத்த மட்டன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 3, இடிச்ச பூண்டு - 4, காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மல்லி - 3 தேக்கரண்டி, எண்ணெய் - 6 தேக்கரண்டி, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி, மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி, உப்பு சிறிது.
எப்படிச் செய்வது?
முதலில், தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் மட்டன் மற்றும் மட்டன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக இடிச்சபூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து பரிமாறவும்.
|