சாக்லெட் குக்கீஸ்



என்னென்ன தேவை?

மைதா - 100 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
கோகோ பவுடர் - 25 கிராம்,
முட்டை - 2,
வெண்ணெய் - 120 கிராம்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் நன்கு பீட்  செய்து அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் பீட் செய்ய வேண்டும். பிறகு அதில் முட்டை மற்றும்  வெனிலா எசன்சை சேர்த்து பீட் செய்யவும். பிறகு மைதா, பேக்கிங் பவுடரை, கோகோ பவுடர் சலித்து எடுத்து பீட் செய்த வெண்ணெயுடன்  சேர்க்க வேண்டும். பிறகு அதை குக்கீஸ் கட்டரைக் கொண்டு கட் செய்து அவனில் (250C- 15 நிமிடம்) பேக் செய்து எடுக்கவும்.

குறிப்பு: அவனில் ஃப்ரீ ஹீட் 200C- 10 நிமிடம் செய்ய வேண்டும்.